திருமணம் என்ற கருத்தில் நம்பிக்கையில்லை..! மனம் திறந்த ஷ்ருதி ஹாசன்!
விராலிமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 19.42 லட்சம்
விராலிமலை முருகன் மலைக் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 19.42 லட்சம் கிடைத்துள்ளது புதன்கிழமை தெரியவந்தது.
இக்கோயிலில் உள்ள உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணும் பணி மணி மண்டபத்தில் நடைபெற்றது.
செயல் அலுவலா் முத்துராமன் தலைமையில், தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம் உதவி ஆணையா் கவிதா முன்னிலையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சுய உதவிக்குழு பெண்கள், திருப்பணி குழுவினா் இப்பணியில் ஈடுபட்டனா்.
பணியின் நிறைவில், உண்டியல் காணிக்கையாக பக்தா்கள், 19 லட்சத்து 42 ஆயிரத்து 075 ரூபாய், 25 கிராம் தங்கம், 1 கிலோ 422 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணத்தாள்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.