விருதுகள் 2024
ஜனவரி
9: சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி ஆகிய இரு பாட்மின்டன் வீரர்களுக்கு கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.
25: ஐசிசியின் 2023-ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.
மார்ச்
11: ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நொலன் இயக்கிய 'ஓபன்ஹெய்மர்' திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது. சிறந்த நடிகர் பிரிவில் சிலியன் முர்ஃபிக்கும், சிறந்த இயக்குநர் பிரிவில் கிறிஸ்டோபர் நொலனுக்கும் விருது வழங்கப்பட்டது.
30: மறைந்த முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ், செளதரி சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பிகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்குர் ஆகிய நான்கு பேருக்கு பாரத ரத்னா விருது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவால் வழங்கப்பட்டது.
ஜூன்
16: 'விஷ்ணு வந்தார்' என்ற சிறுகதைக்காக தமிழகத்தைச் சேர்ந்த லோகேஷ் ரகுராமனுக்கு சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
ஆகஸ்ட்
7: நாட்டின் முதலாவது 'விஞ்ஞான் ரத்னா விருது' உயிரி வேதியியல் விஞ்ஞானி கோவிந்தராஜன் பத்மநாபனுக்கு அறிவிப்பு.
15: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனுக்கு 2024-ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
16: தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு. சிறந்த தமிழ் படம் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 1, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் (பின்னணி இசை), நடிகை நித்யாமேனன் (திருச்சிற்றம்பலம்) உள்ளிட்டோருக்கு விருது.
அக்டோபர்
4: 2023-ஆம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது திரைப்பட பாடகர் பி.சுசீலா மற்றும் கவிஞர் மு.மேத்தா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
டிசம்பர்
18: பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதியின் 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.,யும் 1908' நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது.