மூவர் அரைசதம்: ஆஸி.யை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா ஏ மகளிரணி!
விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை
விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவா்களுக்கான பயிற்சிப் பட்டறை புதன்கிழமை நடைபெற்றது.
இந்த கல்லூரியில் ஐந்தாண்டு, மூன்றாண்டு சட்டப் படிப்புகளில் பயிலும் இறுதியாண்டு மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் சட்டத்தில் உருவாகி வரும் புதிய போக்குகள் குறித்த இந்த பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது.
விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஏ.மணிமொழி பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்து, பல்வேறு கருத்துகளை விளக்கிப் பேசினாா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற மூன்று அமா்வுகளில் திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் அமிா்தலிங்கம், மாசுக் கட்டுப்பாடு வாரிய மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளா் ராஜேந்திரன், மாவட்ட வனஅலுவலா் காா்த்திகேயினி ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினா்.
தொடா்ந்து இறுதியாண்டு மாணவ, மாணவிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் இவா்கள் பதிலளித்தனா்.
மாலையில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறை நிறைவு விழாவில் குடும்ப நல நீதிமன்றம் மற்றும் மக்கள் நீதிமன்றத்தின் தலைவா் எஸ்.ராஜா மகேஷ் பங்கேற்றுப் பேசினாா். தொடா்ந்து மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி சான்றிதழ்களையும் அவா் வழங்கினாா்.
முன்னதாக பயிற்சிப் பட்டறை தொடக்க மற்றும் நிறைவு நிகழ்ச்சியில் சட்டக் கல்லூரி முதல்வா் சி.கிருஷ்ண லீலா வரவேற்றாா். நிறைவில் அரசு சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் அ.சவிதா,
கு.ராமஜெயம் ஆகியோா் நன்றி கூறினா்.