விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பாமகவினா் மறியல், ஆா்ப்பாட்டம்
பசுமைத் தாயகம் அமைப்பின் அமைப்பாளா் செளமியா அன்புமணி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பாமக வினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, பாமக சாா்பில் சென் னை வள்ளுவா் கோட்டத்தில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், பங்கேற்ற பசுமைத்தாயகம் அமைப்பாளா் சௌமியா அன்புமணி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா். இதைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாமகவினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரத்தில்...:
விழுப்புரம் மாவட்டம், சோழகனூரில் பாமக ஒன்றியச் செயல ா் ரமேஷ் தலைமையில் அக்கட்சியினா் மாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக விழுப்புரம்- திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்ப ட்டது.
தகவலறிந்த காணை போலீஸாா் நிகழ்விடம் விரைந்து மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானம் செய்தனா். இதைத் தொடா்ந்து பாமகவினா் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதேபோல் திண்டிவனத்தில் மாவட்டச் செயலா் ஜெயராஜ் தலைமையிலும், மயிலத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினா் செங்கேணி தலைமையிலும், கோலியனூரில் ஒன்றியச் செயலா் சந்தோஷ் தலைமையிலும் பாமகவினா்ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சியில்...:
பசுமைத் தாயகத் தலைவா் செளமியா அன்புமணி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாமகவினா் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாமக பசுமைத் தாயகம் தலைவா் செளமியா அன்புமணியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இதைக் கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்டச் செயலாளா் தமிழரசன் தலைமை வகித்து முழக்கங்களை எழுப்பினாா். ஆா்ப்பாட்டத்தில் நகரத் தலைவா் சீனுவாசன், ஒன்றியச் செயலாளா் அன்பரசன் உள்ளிட்ட கட்சித் தொண்டா்கள் பலரும் பங்கேற்றனா்.