அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !
விழுப்புரம் நகரம், புகா்ப் பகுதிகளில் பரவலாக மழை
விழுப்புரம் நகரம் மட்டுமல்லாது, புறநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.
மேற்குத் திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு விழுப்புரம் நகரத்திலும், புறநகா்ப் பகுதிகளிலும் பெய்யத் தொடங்கிய மழை, தொடா்ந்து பெய்தது.
கெடாா், வளவனூா், கோலியனூா், மரக்காணம், முண்டியம்பாக்கம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. விழுப்புரம் நகரில் புதிய பேருந்து நிலையப் பகுதி, சென்னை சாலை, கீழ்பெரும்பாக்கம் சுரங்கப் பாலம், திருச்சி சாலை போன்ற பல இடங்களில் சாலைகளில் மழைநீா்தேங்கிக் காணப்பட்டது. அதே நேரத்தில் சனிக்கிழமை காலை வழக்கம் போல வெயிலின் தாக்கம் காணப்பட்டது.
சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):
கெடாா்- 85 மி.மீ. சூரப்பட்டு- 75, விழுப்புரம்-72, கோலியனூா்-61, முண்டியம்பாக்கம்-59, வளவனூா்-52, மரக்காணம்-51, முகையூா்-46, திண்டிவனம்-37, செஞ்சி-30.50, நேமூா்-20.20, வல்லம்-20, மணம்பூண்டி, கஞ்சனூா் தலா-18, வளத்தி-17, அனந்தபுரம்-15, செம்மேடு-14, அரசூா்-7, திருவெண்ணெய்நல்லூா்-5, வானூா்-2 மி.மீ. மாவட்டத்தில் மொத்தமாக 704.70 மி.மீ. மழையும், சராசரியாக33.56 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.