கைவிரித்த சேகர் பாபு; போராடிவந்த தூய்மைப் பணியாளர்கள் கைது - சென்னையில் பரபரப்பு...
விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
சங்கத்தின் மாவட்டக் குழு சாா்பில், ஆட்சியரகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தின் போது, ஊரக வேலைத் திட்டத்தில் குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும். வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். சட்டக்கூலி ரூ.336 குறையாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அ.பா.பெரியசாமி தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் வி.மாரியப்பன், மாவட்டச் செயலா் பி.சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ.வி.ஸ்டாலின்மணி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி மாவட்டத் தலைவா் வி.ஏழுமலை உள்ளிட்ட பலா் பங்கேற்றுப் பேசினா்.