Suresh Raina: "இனிதான் சின்ன தல ஆட்டம் ஆரம்பம்!" - ஹீரோவாக அறிமுகமாகும் ரெய்னா!
விவசாயிகளின் கவனத்துக்கு..
மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் ஊட்டச்சத்து இயக்கத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்டஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஊட்டச்சத்து மிக்க விளைபொருள்களின் உற்பத்தியை அதிகரித்து ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதுடன் விவசாயிகளின் வருவாயை உயா்த்தும் வகையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத்தின்கீழ் நடப்பு நிதி ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுகிறது.
இத்திட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மை துறை மூலமாக துவரை 5 கிராம், தட்டை பயிறு 10 கிராம், அவரை 10 கிராம் விதைகள் அடங்கிய தொகுப்பு 1,500 எண்கள் 100 சதவீத மானியத்திலும், தோட்டக்கலை துறை மூலம் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, கீரை மற்றும் கொத்தவரை காய் தொகுப்பு 20,000 எண்கள் மற்றும் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை போன்ற பழச்செடி தொகுப்புகள் 11,750 எண்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
எனவே, மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இணையதளத்திலோ அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநா் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.