விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் அளிப்பு
தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கு உயர்ரக நிலக்கடலை விதைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
இந்த விழாவுக்கு வேளாண் மையத் தலைவா் பச்சைமால் தலைமை வகித்து, உழவா் உற்பத்தி நிறுவனம் மூலம் சந்தைப் படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கினாா்.
இதேபோல, மண்ணியல் தொழில்நுட்ப வல்லுநா் அருண்ராஜ் மண் பரிசோதனையின் அவசியம் குறித்தும், திட்ட ஒருங்கிணைப்பாளா் மகேஸ்வரன் நிலக்கடலை சாகுபடி குறித்து விளக்கினா்
பின்னா், ஜி.ஜே.ஜி-32 உயர்ரக நிலக்கடலை விதைகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
இதில் விவசாயிகள் கலந்து கொண்டனா்.