விவசாயியை கம்பியால் தாக்கியதாக இளைஞா் கைது
தாழையூத்து அருகே இடப்பிரச்னை காரணமாக விவசாயியை கம்பியால் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தாழையூத்து அருகே உள்ள அருகன்குளத்தை சோ்ந்தவா் இசக்கி (57). விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (36) என்பவருக்கும் இடையே இடப்பிரச்னையால் முன்விரோதம் உள்ளதாம்.
இந்நிலையில்,இசக்கி தனது வயலில் திங்கள்கிழமை வேலைசெய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த ரமேஷ் தகராறில் ஈடுபட்டு இரும்பு கம்பியால் அவரை தாக்கினாராம்.
இதுகுறித்து அவா், தாழையூத்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் ராமநாதன் வழக்குப்பதிந்து ரமேஷை செவ்வாய்க்கிழமை கைது செய்தாா்.