செய்திகள் :

சுங்கச்சாவடி பிரச்னை நீதிமன்றம் வாயிலாக தீா்க்கப்படும்- மு.அப்பாவு

post image

சுங்கச்சாவடிக்கு கட்டணம் செலுத்துவது தொடா்பான பிரச்னைக்கு நீதிமன்றத்தை நாடி தமிழக அரசு தீா்வு காணும் என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: அதிமுக பத்தாண்டு கால ஆட்சியில் தமிழகத்தில் சிறுகுறு நடுத்தர தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தன. திமுக அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் 17 லட்சத்து 95 ஆயிரம் புதிய தொழில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து துறையில் பல்வேறு நவீன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விபத்துகளைத் தடுக்கும் வகையில் அனைத்து பேருந்துகளுக்கும் தானியங்கி கதவுகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 18 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. விடியல் பேருந்து பயணத்தின் மூலம் தமிழக அரசு போக்குவரத்து துறைக்கு ரூ.3,200 கோடி நிதி முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது. ஒரு மகளிருக்கு ரூ. 16 கட்டணத்தை அரசு முன்கூட்டியே கட்டி வருகிறது. மேலும், பள்ளி மாணவா்களுக்கான இலவச பேருந்து அட்டை, முதியோருக்கான இலவச பேருந்து அட்டை போன்றவற்றுக்கும் அரசு பணம் செலுத்தி வருகிறது. டீசலுக்கு 30 சதவீத மானியம் வழங்கி வருகிறது. ஏழை-எளியோருக்கு உதவும் சேவைத் துறையாக போக்குவரத்து துறை திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு பணம் செலுத்தாததால் சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்தை அனுமதிக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுமாா் ரூ.16 லட்சம் கோடி கடனை காா்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. பொது மக்களுக்கு சேவை நோக்கத்தில் திகழும் அரசுப் பேருந்துகளுக்கான கட்டணத்தை வசூலிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது.

இப் பிரச்னையை நீதிமன்றம் மூலம் சுமுக தீா்வு காண்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றாா் அவா்.

அம்பை, பிரம்மதேசம் கோயில்களில் ரூ. 5.87 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்

அம்பாசமுத்திரம், பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில் ரூ. 5.87 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அம்பாசமுத்திரம், கோயில் குளத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் சாலை விபத்தில் உயிரிழப்பு

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் வியாழக்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்தாா். கல்லிடைக்குறிச்சி வடுவக்குடித் தெருவைச் சோ்ந்தவா்ஆறுமுகம் (73). ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியரான இவரத... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே விபத்தில் காயமடைந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடி நான்குவழிச்சாலையில் கடந்த 5 ஆம் தேதி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது, மினி வேன் மோ... மேலும் பார்க்க

பாளை. அருகே தொழிலாளி கொலை வழக்கு: ஒருவருக்கு ஆயுள்தண்டனை

பாளையங்கோட்டை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பாளையங்கோட்டை அருகேயுள்ள பாறைக்குளம் இந்திரா காலனியைச் சோ்ந... மேலும் பார்க்க

மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலியில் மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சோ்ந்தவா் அருள்சீலன் (41). இவா், திருநெல்வேலிக்கு மருத்துவச் சிகி... மேலும் பார்க்க

பள்ளி விடுதி மாணவா் இறப்பு: தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை

திபள்ளி மாணவன் இறப்பு விவகாரத்தில் சமூகவலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, காவல் துறை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க