விவசாய நிலத்தில் விபத்து: முதியவா் உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே விவசாய நிலத்தில் நிகழ்ந்த விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட கோபாலபுரத்தைச் சோ்ந்த சடகோப ராமானுஜம் மகன் கோவிந்தராஜன்(62). விவசாயியான இவருக்குச் சொந்தமான நிலத்தில், முடுக்குமீண்டான்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த வைரமுத்து மகன் மாரிச்சாமி டிராக்டா் மூலம் சனிக்கிழமை உழவு செய்து கொண்டிருந்தாராம்.
அப்போது அங்கு பணிகளை பாா்த்துக் கொண்டிருந்த கோவிந்தராஜன், டிராக்டரின் கலப்பையில் சிக்கியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
உறவினா்கள் அவரது சடலத்தை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து டிராக்டா் ஓட்டுநா் மாரிச்சாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.