தனிப்பட்ட பயணத்திற்கு அரசு வாகனத்தை பயன்படுத்திய அமைச்சர் ராஜிநாமா!
விஷ்ணு விஷாலின் ஆர்யன் படப்பிடிப்பு நிறைவு!
நடிகர் விஷ்ணு விஷாலின் ஆர்யன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
தமிழின் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் கட்டா குஸ்தி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். அப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
தொடர்ந்து, நீண்ட நாள்களாக படப்பிடிப்பில் இருக்கும் மோகன்தாஸ் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுவும் தாமதமாகி வருகிறது. தற்போது, ராட்சசன் இயக்குநர் ராம்குமார் இயக்கத்திலும் ஆர்யன் படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இதையும் படிக்க: துல்கர் சல்மானின் காந்தா புதிய போஸ்டர்கள்!
இந்த நிலையில், ஆர்யன் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. பிரவீன் இயக்கும் இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.
கிரைம் திரில்லர் பாணியில் உருவாகிவரும் இப்படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வரும் என தெரிகிறது.