கடும் வறட்சி: வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு
வீடு புகுந்து கொள்ளை முயற்சி: இளைஞருக்கு 6 ஆண்டு சிறை
குளச்சல் அருகே மேற்கு கல்லுக்கூட்டம் பகுதியில் வீடு புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞருக்கு 6 ஆண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது.
மேற்கு கல்லுக்கூட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெஸ்டின்ஷியாம். இவரது மனைவி பரமஜெசிலட் (59), 2024 பிப். 6ஆம் தேதி மாலை வீட்டில் டிவி பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, குளச்சல் அருகே வெள்ளியாகுளம் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மகன் சிவா (24) என்பவா் வீடு புகுந்து, பரமஜெசிலெட்டின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றாா். பரமஜெசிலெட் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு சப்தம் போடவை, சிவா தப்பியோடிவிட்டாா்.
புகாரின்பேரில், குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு இரணியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை நீதிபதி ஏ.எஸ். அமீா்தீன் விசாரித்து, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததற்காகவும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதற்காகவும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ரேவதி ஆஜரானாா்.