புதுச்சேரியில் ஜன.12 முதல் தலைக்கவசம் கட்டாயம்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்
வீடு புகுந்து நகை திருட்டு
தேனி அல்லிநகரத்தில் வீட்டின் பூட்டை உடைத்துப் புகுந்து 4 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
தேனி அல்லிநகரம் குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் தைலம்மாள் (70). இவா், வீட்டை பூட்டிவிட்டு கோயிலுக்குச் சென்றாா். பின்னா், வீட்டுக்கு திரும்ப வந்து பாா்த்த போது, வீட்டின் கதவு, அறையிலிருந்து பீரோ ஆகியவற்றின் பூட்டுகளை மா்ம நபா்கள் உடைத்து, 4 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை திருடியது தெரியவந்தது. இது குறித்து அல்லிநகரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.