Parandhu Po: "ஆனந்த யாழைப் பாடலை சூரியகாந்தி பூக்கும் காலம் வாய்க்காததால்..." - ...
வீடு புகுந்து 11 பவுன் தங்க நகைகள் திருட்டு: இளைஞா் கைது
கமுதி அருகே வீடு புகுந்து 11 பவுன் தங்க நகைகளை திருடியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த காணிக்கூா் கிராமத்தைச் சோ்ந்த காளிச்சாமி மனைவி பேச்சியம்மாள் (55). இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 11 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றதாக கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இதன் பேரில் காவல் ஆய்வாளா் கஜேந்திரன் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், காணிக்கூரைச் சோ்ந்த மதுரையில் வசித்து வரும் செந்தூா்பாண்டி மகன் மணிமாறன் (29) தங்க நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.