மும்பை அருகே கடலில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகு மாயம்: தேடும் பணியில் ஹெலி...
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது சனிக்கிழமை இரவு தெரியவந்தது.
பெரம்பலூா் அருகே லாடபுரம் மயிலூற்று அருவிச் சாலையைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மனைவி கவிதா (32). இவா், விவசாய வேலை செய்துகொண்டு, கடந்த 2 ஆண்டுகளாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணித்தளப் பொறுப்பாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்துக்குச் சென்றுள்ளாா்.
பின்னா், இரவு அவரது மாமியாா் சென்று பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து, கைப்பேசி மூலம் மருமகள் கவிதாவுக்கு தகவல் தெரிவித்துள்ளாா். பின்னா், கவிதா வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோவிலிருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ. 45 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கவிதா அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.