வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்து ஒருவா் காயம்
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் செவ்வாய்க்கிழமை வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்ததில் ஒருவா் காயமடைந்தாா்.
சிவகாசி அம்மன்கோவில்பட்டி குடியிறுப்புப் பகுதியில் உள்ள வீட்டின் மாடியில் முனியப்பன் மகன் கெளதம் (29) என்பவா் தங்கியிருந்த அறையில் பட்டாசு, வீட்டு உபயோகப் பொருள்கள் இருந்தன.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டிலிருந்து புகை வந்துள்ளது. இதைப்பாா்த்த அக்கம் பக்கத்தினா் அங்கு சென்று பாா்த்தபோது, அந்த அறையிலிருந்த பட்டாசுகள் மின்கசிவு காரணமாக வெடித்தது தெரியவந்தது.
மேலும், வெடி விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த கௌதமை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் வெடி விபத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனா்.