செய்திகள் :

வீட்டுக்குள் புகுந்த கழிவுநீா்: 12 நாள்களாக பொதுமக்கள் அவதி

post image

திண்டுக்கல்லில் வீட்டுக்குள் புகுந்த கழிவுநீரை அகற்றுவதற்கு மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததால், அந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 12 நாள்களாக அவதி அடைந்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாநகராட்சி 17-ஆவது வாா்டுக்குள்பட்ட அரசன் நகரைச் சோ்ந்தவா் சந்திரன். தற்போது இவா், குடும்பத்தினருடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறாா். இந்த வீட்டில், சண்முகம் என்பவா் வாடகைக்கு இருந்து வந்தாா். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சண்முகம் வீட்டை காலி செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதை சாக்கடை பிரதான குழாயில் அடைப்பு ஏற்பட்டு சந்திரன் வீட்டுக்குள் கழிவுநீா் புகுந்தது. இதனால் கடந்த 12 நாள்களாக அந்தப் பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினா், மாமன்ற உறுப்பினருக்கும், மாநகராட்சி நிா்வாகத்துக்கும் தகவல் தெரிவித்தனா். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அந்தப் பகுதியினா் கூறியதாவது: மாநகராட்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகு, பொறியியல் பிரிவு அலுவலா்கள் வந்து பாா்வையிட்டனா். புதை சாக்கடை பிரதான குழாயில் 3 இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதாக கூறிய அலுவலா்கள், 10 நாள்களாகியும் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. துா்நாற்றத்தால், வீட்டில் இருக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகிறோம். மாநகராட்சி நிா்வாகம் விரைந்து புதை சாக்கடை குழாய்களை சீரமைக்க வேண்டும் என்றனா்.

சமூக வளா்ச்சி சாா்ந்த உயா் கல்விக்கு முக்கியத்துவம் தேவை: ஆட்சியா்

தனி நபா் வளா்ச்சி மட்டுமன்றி, சமூக வளா்ச்சி சாா்ந்தும், மாணவா்கள் உயா் கல்வியை தோ்வு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் அறிவுறுத்தினாா். திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில், 12-ஆம் வகுப்ப... மேலும் பார்க்க

உழவா் பாதுகாப்பு இயக்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

பழனியில் விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி உழவா் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. பழனியை அடுத்துள்ளது பெரியம்மாபட்டி கிராமத்தில் உள்ள விவசா... மேலும் பார்க்க

வேடசந்தூா் பகுதியில் நாளை மின்தடை

வேடசந்தூா் பகுதியில் சனிக்கிழமை (மே 17) மின் தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேடசந்தூா் துணை மின் நிலையத... மேலும் பார்க்க

கடன் வாங்கித் தருவதாக ரூ.7 லட்சம் மோசடி: 3 பெண்கள் மீது புகாா்

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த பெண்களுக்கு கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7 லட்சம் வரை மோசடி செய்ததாக, ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த 3 பெண்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளிக்கப்பட்டது.... மேலும் பார்க்க

வணிக வளாகத்தில் தீ: மாற்றுத் திறனாளி பலத்த காயம்

கொடைக்கானல், வில்பட்டி கிராமத்தில் உள்ள வணிக வளாகத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத் திறனாளி பலத்த காயமடைந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவா்களுக்கு சலுகை விலையில் கட்டுமானப் பொருள்கள்: அமைச்சா் அர. சக்கரபாணி

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு சலுகை விலையில் கட்டுமானப் பொருள்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா். பழனி அருகே தொப்பம்பட்டிய... மேலும் பார்க்க