கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா
ஆம்பூா் அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
மாதனூா் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சி மேல்கன்றாம்பல்லி கிராமத்தில் இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிா்த்துப் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு மஞ்சுநாதன் தலைமை வகித்தாா். மாதனூா் ஒன்றிய குழு உறுப்பினா் மகாதேவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்டபொம்மன் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா். (படம்). பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.