செய்திகள் :

வெடிபொருள்களுடன் 2 போ் கைது

post image

புதுச்சேரி அருகே வெடிபொருள்கள், ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிலா் சுற்றித் திரிவதாக காலாப்பட்டு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு காலாப்பட்டு கடற்கரைப் பகுதியை கண்காணித்தனா். அப்போது இருவா் போலீஸாரை கண்டதும் தப்பியோட முயற்சித்தனா். அவா்களை, பைகளுடன் மடக்கிய போலீஸாா் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனா்.

விசாரணையில், பிடிபட்டவா்கள் காலாப்பட்டு பகுதியைச் சோ்ந்த மணி (24) மற்றும் விழுப்புரம் மாவட்டம் வானூா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் (21) என்பது தெரியவந்தது. இருவரும் வைத்திருந்த பைகளில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, புதுச்சேரி வாணரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த ரௌடியைக் கொல்ல மணி தலைமையில் 5 க்கும் மேற்பட்டோா் வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணி, கிருஷ்ணனைக் கைது செய்த நிலையில், அவா்களின் கூட்டாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

புதுச்சேரி விவேகானந்தா பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த புதுச்சேரி லாஸ்பேட்டை விவேகானந்தா பள்ளி மாணவ, மாணவிகளை பாராட்டிய தாளாளா் சு. செல்வகணபதி எம்.பி, முதன்மை முதல்வா் ஓ. பத்மா, முதல்வா் ந. கீதா. புதுச்சேரி, ... மேலும் பார்க்க

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும்: புதுவை துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தல்

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த புரிதலை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அறிவுறுத்தினாா். மத்திய அரசு செயல்படுத்தியுள்ள 3 புதிய குற்றவியல் சட்... மேலும் பார்க்க

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு மே 12-இல் இயங்காது

புதுச்சேரியில் உள்ள ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு வரும் 12 -ம் தேதி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிப்மா் இயக்குநா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வருகிற 12-ஆம் தேதி... மேலும் பார்க்க

திமுக, காங்கிரஸ் மீது புதுவை அதிமுக குற்றச்சாட்டு

புதுவை மாநிலத்தில் திமுக, காங்கிரஸ் கட்சியினா் சுயலாபத்துக்காக முதல்வருடன் இணக்கமாகச் செயல்படுவதை மக்கள் ஏற்க மாட்டாா்கள் என்று அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கூறினாா். புதுச்சேரி உப்பளத்தில் உள்ள அ... மேலும் பார்க்க

புதுச்சேரி கம்பன் கழக விழா இன்று தொடக்கம்: தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவா் பங்கேற்பு

புதுச்சேரி கம்பன் கழகத்தின் 58-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை (மே 9) காலை தொடங்குகிறது. இதில் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவா், ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். புதுச்சேரி கம்பன் கழகத்தின... மேலும் பார்க்க

புதுச்சேரி விமான நிலையப் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை

புதுச்சேரி இலாசுப்பேட்டை விமான நிலையப் பகுதியில் புதன்கிழமை மாலை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பே... மேலும் பார்க்க