கழுத்தில் கட்டி: நெல்லை அரசு மருத்துவமனையில் சிறுவன் மரணம்! உறவினர்கள் போராட்டம்
வெற்றி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா
பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி கருப்பா்கோவில்பட்டி வெற்றி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், வாஸ்து பூஜை மற்றும் முதல்கால யாகபூஜைகள் நடைபெற்றது. புதன்கிழமை அதிகாலை இரண்டாம்கால யாகபூஜைகள் செய்யப்பட்டு காலை 10.45 மணியளவில் யாகசாலையில வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரினை கும்பத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்யப்பட்டது.
விழாவில், அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்டச்செயலா் பிகே. வைரமுத்து மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸாா் செய்திருந்தனா்.