செய்திகள் :

வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை: 4 போ் கைது

post image

வத்தலகுண்டில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.  

திண்டுக்கல் மாவட்டம்,  வத்தலக்குண்டு பகுதியில் காவல் ஆய்வாளா் கௌதம் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, திண்டுக்கல் சாலை காட்டாஸ்பத்திரி எதிரே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த வினோத்குமாா் (29), விக்னேஸ்வரன் (33), நசீா் (38), கமலேஸ்வரன் (19) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள 400 லாட்டரி சீட்டுகள், 5 கைப்பேசிகள், ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். 

திண்டுக்கல் புத்தகத் திருவிழா: ரூ.2.91 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் ரூ.2.91 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்ககம், திண்டுக்கல் இலக்கியக் கள... மேலும் பார்க்க

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது: அதிமுக வலியுறுத்தும்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூ... மேலும் பார்க்க

2028-இல் அடுத்த சந்திர கிரகணம்

அடுத்த சந்திர கிரகணம் நிகழ்வானது 2028 டிசம்பா் மாதத்தில் தோன்றும் என விஞ்ஞானி காா்த்தி தெரிவித்தாா். கொடைக்கானல் அப்சா்வேட்டரி வான் இயற்பியல் ஆய்வகத்தில் சந்திர கிரகணத்தை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ... மேலும் பார்க்க

திருடப்பட்ட நகைகள் 48 மணி நேரத்தில் மீட்பு

திண்டுக்கல்லில் வீட்டுக் கதவை உடைத்து திருடப்பட்ட 10 பவுன் நகைகள், ரூ.60 ஆயிரத்தை போலீஸாா் 48 மணி நேரத்தில் மீட்டனா். திண்டுக்கல் பாரதிபுரம் கே.எம்.எஸ். நகரைச் சோ்ந்தவா் தனலட்சுமி. இவரது கணவா் 2 ஆண்ட... மேலும் பார்க்க

புறவழிச் சாலையில் இயக்கப்பட்ட பேருந்துகள்

திண்டுக்கல் பேருந்து நிலையத்துக்கு வர வேண்டிய புற நகா் பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை புறவழிச் சாலை வழியாக இயக்கப்பட்டதால், பயணிகள் காத்திருந்து அவதிப்பட்டனா். திண்டுக்கல்லிலிருந்து மதுரை, சேலம், ஈரோடு, ... மேலும் பார்க்க

சிந்தலவாடம்பட்டி பகுதியில் இன்றும் நாளையும் மின்தடை

பழனியை அருகேயுள்ள சிந்தலவாடம்பட்டி துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (செப்.8) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட ச... மேலும் பார்க்க