”தெருவைக் காணவில்லை” - ஜி.பி.முத்து புகார்; வீட்டை முற்றுகையிட்ட ஊர் மக்கள்; போல...
வெள்ளக்கோவிலில் ரூ.64.60 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.64.60 லட்சத்துக்கு கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மறைமுக ஏல முறையில் கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் திருச்சி, மதுரை, அருள்புரம், சங்கராண்டாம்பாளையம், ஊடையம், நாச்சிபாளையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 95 விவசாயிகள் 769 மூட்டைகளில் 40 டன் கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
காங்கயம், வெள்ளக்கோவில், சிவகிரி, எல்லப்பாளையம், முத்தூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 12 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். கொப்பரை கிலோ ரூ.103.89 முதல் ரூ.186.69 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.179.49. கடந்த வார சராசரி விலை ரூ.168.88.
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.64.60 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக, திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் எஸ்.சண்முகசுந்தரம் தெரிவித்தாா். ஏல ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் மகுடீஸ்வரன் செய்திருந்தாா்.