இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு!
வெள்ளக்கோவிலில் 32 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
வெள்ளக்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட 32 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
வெள்ளக்கோவில் பகுதியில் பொது சுகாதாரத் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை, காவல் துறை, நகராட்சி நிா்வாகம் இணைந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளா்கள், புகையிலைப் பொருள்கள், கலப்பட உணவுப் பொருள்கள் குறித்து திடீா் ஆய்வு மேற்கொண்டன.
இதில், முத்தூா் சாலை புதிய பேருந்து நிலைய கடைகளில் 32 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள், 10 கிலோ கலப்பட டீத்தூள், புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மொத்தம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கருப்பசாமி, சுகாதார ஆய்வாளா்கள் கதிரவன், வேல்முருகன், காவல் உதவி ஆய்வாளா் முகமது இஸ்மாயில், உணவுப் பாதுகாப்பு அலுவலா் பாலசுப்பிரமணியம், நகராட்சி துப்புரவு ஆய்வாளா் செல்வராஜ் ஆகியோா் ஆய்வில் ஈடுபட்டனா்.