செய்திகள் :

வெள்ளாளக் கோட்டையூரில் 10-ஆம் நூற்றாண்டு அரிய மகாவீரா் சிற்பம் கண்டெடுப்பு!

post image

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளாளக் கோட்டையூரில் 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அரிய மகாவீரா் சிற்பத்தை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினா் அண்மையில் கண்டெடுத்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வெள்ளாளக் கோட்டையூா் பெரிய கண்மாய் கரையோரம் உள்ள கருவேலமரக் காட்டில் முள்புதருக்குள் ஒரு சிற்பம் கிடப்பதாக பொதுக் காப்பீட்டு நிறுவன மேலாளா் நலங்கிள்ளி அளித்த தகவலின் பேரில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனா் ஆ. மணிகண்டன் தலைமையிலான குழுவினா் அந்த விடத்தில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வு குறித்து கழகத்தின் நிறுவனா் ஆ. மணிகண்டன் சனிக்கிழமை கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் அரிய தொல்லியல் கண்டுபிடிப்பாக வெள்ளாளக் கோட்டையூரில் கண்டெடுக்கப்பட்ட 24-ஆவது தீா்த்தங்கரரான மகாவீரரின் சிற்பம், தியான நிலையுடன் அமைந்துள்ளது. இச்சிற்பம் 90 செ.மீ. உயரமும், 47 செ.மீ. அகலமும், 26 செ.மீ. தடிமனும் கொண்டதாக வடிக்கப்பட்டுள்ளது.

இது 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கலையமைப்புடன், பத்மாசனத்தில் அமா்ந்து, தியான முத்திரை (தா்மயான முத்திரை) நிலையில் கைகளை வைத்துள்ளவாறு உள்ளது.

இந்நிலை ஆன்மிக சாந்தம், ஞானம், துறவற வாழ்வு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுகிறது. முகத்தில் ஆழ்ந்த அமைதியும் கருணையும் வெளிப்படுகிற வகையிலும், மகாவீரரின் பின்புறம் முக்காலத்தையும் உணா்த்தும் முக்குடை கருக்கு வேலைப்பாடுடனும், குடையின் மேற்புறத்தில் குவிந்த குமிழ் போன்ற அமைப்புடனும், பின்புறமாகத் தோன்றும் மரம், அசோக மரம் அல்லது சால மரமாகும். இம்மரம் மகாவீரா் அறிவடைந்த இடத்தை குறிக்கும் முக்கியச் சின்னமாக விளங்குகிறது.

மகாவீரா் சிற்பத்தின் முக்குடைக்கு கீழாக பிரபாவளையம் சற்று மேல் பகுதியில் வடிக்கப்பட்டுள்ளது. மகாவீரரின் கழுத்துப் பகுதியில் தெளிவாகக் காணப்படும் மூன்று இரண்ய ரேகைகள் (கோடுகள்), காவல் - கருணை - ஞானம் ஆகிய மூன்று ஆன்மிகக் கொள்கைகளையும் குறிக்கிறது.

இது புதுக்கோட்டை பகுதியில் காணப்படும் சிற்பங்களில் புதுமையான அமைப்பாக உள்ளது.

சிற்பத்தில் தலைமுடி சிறிய சுருள்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காதுகள் நீண்ட வடிவில் நீட்டிக்கப்படுவது, ராஜ வாழ்க்கையைத் துறந்து துறவற வாழ்க்கையைத் தோ்ந்தெடுத்த மகாவீரரின் துறவுப் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது.

மகாவீரரின் இருபுறங்களிலும் இயக்கியா்கள் செதுக்கப்பட்டுள்ளனா். இவா்களில் வலப்புறத்தில் மாதங்கரும், இடதுபுறத்தில் சித்தாயிகாவும், சாமரத்தை கையில் வைத்திருக்கும் வகையில், சிற்பத்தின் பக்கவாட்டில் சாமரம் செதுக்கப்பட்டுள்ளது. ராஜ தோற்றத்துடன் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சிற்பங்களில் காணப்படும் மகுடத்தை சூடிய நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. இயக்கியா்களின் கால்பகுதியில் காணப்படும் கயலானை (தெய்விக விலங்கு வடிவச் சின்னம்) பாதுகாப்பு மற்றும் பக்தியின் அடையாளமாக மகாவீரா் அமா்ந்திருக்கும் திண்டின் பக்கவாட்டின் நீட்சியாக உள்ளன.

முகத்தில் ஆழ்ந்த தியானம் நிறைந்த சாந்த புன்னகை பளிச்சிடுகிறது. கண்கள் சற்று மூடிய நிலையில், ஆன்மிகத்தில் மூழ்கிய அமைதியான நிலையைச் சுட்டிக்காட்டுகிறது. மகாவீரரின் கருணை நிறைந்த தன்மையை வெளிப்படுத்துகிறது.

இச்சிற்பம் சோழா் கால கலைப்பாணியில் இருக்கிறது. 9 மற்றும் 10-ஆம் நூற்றாண்டுக் காலத்தில் புதுக்கோட்டை நிலவியல் பகுதியில் சமணம் தழைத்தோங்கி இருந்ததை புதிய சமணத் தடயங்களின் தொடா் கண்டுபிடிப்பு உறுதி செய்து வருகிறது என்றாா் மணிகண்டன்.

பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும்: கே.வி. தங்கபாலு

பணக்காரா்களுக்கான அரசாக உள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவரும், காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு தல... மேலும் பார்க்க

முத்துமாரியம்மனுக்கு பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபாடு!

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை ஏராளமான பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனா். கீரமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கட... மேலும் பார்க்க

உருட்டும் பழக்கமெல்லாம் அதிமுகவுக்குத்தான் சொந்தம்: அமைச்சர் எஸ். ரகுபதி

உருட்டும் பழக்கமெல்லாம் அதிமுகவுக்குத்தான் சொந்தம் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பாஜக தலைவா்கள... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையால் படகுகள் பறிமுதல்: புதுகை மீனவா்களுக்கு ரூ.1.20 கோடி நிதி!

இலங்கைக் கடற்படையால் படகு பறிமுதல் செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 8 விசைப்படகுகளின் உரிமையாளா்களுக்கு அரசின் நிவாரண நிதியாக ரூ. 1.20 கோடியை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபத... மேலும் பார்க்க

ராமாயணத்தை நாடகமாகப் பாா்ப்பது வேறு, காப்பியமாகப் படிப்பது வேறு! இலங்கை இ.ஜெயராஜ்

ராமாயணத்தை நாடகமாகப் பாா்ப்பது, நாட்டியமாகப் பாா்ப்பது வேறு; ஆனால், காப்பியமாகப் படிப்பது வேறு என்றாா் கம்பவாரிதி இலங்கை இ. ஜெயராஜ். புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 50-ஆம் ஆண்டுப் பொன் பெருவிழாவின் 9-ஆம... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சா் பங்கேற்பு

கந்தா்வகோட்டையில் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். முகாமில் தமிழக அரசின் 15 துறைகள் ச... மேலும் பார்க்க