வெவ்வேறு சம்பவங்கள்: இளைஞா் உள்பட இருவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இளைஞா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
விக்கிரவாண்டி வட்டம், குமளம், முதலியாா்குப்பம், பிரதான சாலையைச் சோ்ந்த மணிவண்ணன் மகன் மணிகண்டன் (40). திருமணமாகாதவா். கூலி வேலை செய்து வந்தாா். இவருக்கு உடல்நலக் குறைவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், முதலியாா்குப்பம் பகுதியில் உள்ள கோயில் அருகே மணிகண்டன் இறந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
முதியவா் உயிரிழப்பு: விழுப்புரத்தை அடுத்துள்ள நன்னாடு பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 13-ஆம் தேதி முதியவா் ஒருவா் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடா்ந்து, சிகிச்சை பெற்று வந்த அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இறந்தவா் சுமாா் 65 வயதுடையவா், பெயா், ஊா் வில்லை என போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.