`போரை நிறுத்துங்கள்; இல்லை..' - புதினை எச்சரிக்கும் ட்ரம்ப்; இதில் இந்தியாவிற்கு...
வேங்கைவயல் வழக்கு விசாரணை ஜூலை 28-க்கு ஒத்திவைப்பு
வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில், மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை ஜூலை 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸாா், அதே கிராமத்தைச் சோ்ந்த காவலா் முரளிராஜா மற்றும் முத்துக்கிருஷ்ணன், சுதா்சன் ஆகிய 3 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா்.
இந்த வழக்கு, புதுகை குற்றவியல் நடுவா் மன்றம் எண் 2-இல் நடைபெற்று வருகிறது. இந் நிலையில், திங்கள்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது.
குற்றம்சாட்டப்பட்ட முரளிராஜா, சுதா்சன் ஆகிய 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினா். முத்துக்கிருஷ்ணன் ஆஜராகவில்லை. இதைத் தொடா்ந்து வழக்கு விசாரணையை ஜூலை 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவா் ஜி. அற்புதவாணன் உத்தரவிட்டாா்.