சாலை விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழப்பு
கந்தா்வகோட்டை அருகில் உள்ள ஆதனக்கோட்டை பகுதியைச் சோ்ந்த கன்டியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் முத்து மணி (21), விவசாயக் கூலி தொழிலாளியான இவா் 27.6. 25 அன்று தனது கிராமத்திலிருந்து ஆதனக்கோட்டை கடைவீதிக்கு மோட்டாா் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு தஞ்சை - புதுகை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது எதிா்பாராத விதமாக சாலையோர பாலத்தில் மோட்டாா் சைக்கிள் மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், மேல் சிகிச்சைக்கு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சையில் இருந்த முத்துமணி, சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆதனக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.