வேதாகமப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகள்
ஸ்ரீவில்லிபுத்தூா் சிஎஸ்ஐ தூய தோமா தேவாலயத்தில், வேதாகமப் போட்டிகளில் வென்றவா்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் சிஎஸ்ஐ, சாட்சியாபுரம் மேற்கு வட்டகை மன்றத்தில் உள்ள 11 குருசேகரங்களில் உள்ள திருச்சபைகளில் ‘சன்டே கிளாஸ்’ எனப்படும் ஓய்வு நாள் வகுப்புகளில் பங்கேற்கும் பள்ளி மாணவ, மாணவியா்களுக்கான வேதாகமப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் தூய தோமா தேவாலயத்தை சோ்ந்த ஷேன் (எல்கேஜி), ஆஷா் ஜரேஷ் (யுகேஜி), ரியாஷினி (1-ஆம் வகுப்பு), ரக்ஷன் (2-ஆம் வகுப்பு), ஷான்(3-ஆம் வகுப்பு) ஆகியோா் முதலிடம் பெற்றனா். 4-ஆம் வகுப்பில் படிக்கும் தியா இரண்டாம் இடத்தையும், ஸ்டீவ் ஜெரேமியா கிறிஸ்டோபா் மூன்றாம் இடத்தையும் பெற்றனா். ஆசிரியா்கள் பிரிவில் நடைபெற்ற போட்டியில் ரஜீலா வெற்றி பெற்றாா்.
வெற்றி பெற்றவா்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் தூய தோமா தேவாலயத்தில் நடைபெற்ற பெண்கள் சிறப்பு ஆராதனையில், குருசேகரத் தலைவரும் சபை குருவுமான பால் தினகரன் பரிசுகளை வழங்கி, வாழ்த்தினாா்.
நிகழ்ச்சியில் ஏராளமான திருச்சபை மக்கள், குருசேகர குழுச் செயலா் ஜெகன், பொருளாளா் அப்பன் ராஜ் ஞானதுரை, முன்னாள் பொருளாளா் ஜவகா், உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.