வேதாந்த தேசிகன் அவதாரத் திருவிழா
காஞ்சிபுரம் வேதாந்த தேசிகனின் திருஅவதாரத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள தூப்புல் வேதாந்த தேசிகன் திருக்கோயில். புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தில் வேதாந்த தேசிகா்அவதரித்ததையொட்டி திருஅவதாரத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி வரும் அக்.3 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
முதல் நாள் நிகழ்வாக தேசிகன் சுவாமிகள் தங்கப்பல்லக்கிலும், மாலையில் சப்பரத்திலும் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
விழாவையொட்டி தினசரி காலையில் தேசிகன் சுவாமிகள் தங்கல்பல்லக்கிலும், மாலையில் வெவ்வேறு வாகனங்களிலும் அலங்காரமாகி ா வருகிறாா்.
செப்.29-இல் தேரோட்டமும், மாலையில் ராமா் திருக்கோலத்தில் தேசிகனின் வீதியுலாவும் நடைபெறுகிறது. அக்.2-இல் விளக்கொளிப் பெருமாள் மங்களாசாசனமும், வரதராஜ சுவாமி தங்கப்பல்லக்கில் அஞ்சலித் திருக்கோலத்தில் எழுந்தருளும் நிகழ்வுகளும், புஷ்பப் பல்லக்கில் தேசிகன் வீதியுலா வருதலும் நடைபெறுகிறது.
3- ஆம் தேதி கந்தப்பொடி வசந்தம் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.