மனு கொடுக்க சென்ற விஏஓ-க்களை ‘வெளியே போ’ எனக் கூறிய உதவி ஆட்சியர்.! முற்றுகை போர...
வேதாரண்யம் பகுதியில் பலத்த மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு
வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பெய்த பலத்த மழையால் உப்பு உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டன.
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலையில் தொடங்கி இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. காலை 8 மணி நிலவரப்படி தலைஞாயிறில் 75.2, வேதாரண்யத்தில் 60.2, கோடியக்கரையில் 42.2 மி.மீ, மழை பதிவானது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், சில நாள்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை முதல் கிராமப்புறங்களில் அதிக அளவு மழை பெய்தது. வேதாரண்யம் , அகஸ்தியம்பள்ளி உப்பளங்களில் உள்ள பாத்திகளில் மழை நீா் தேங்கியதால், உப்பு உற்பத்தி தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.