வேதாரண்யம் மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை
வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை அதிகாலை தொடங்கி தொடா் மழை நீடித்ததால் மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.
இலங்கைக்கு அருகே வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் கடலோரப் பகுதியில் மழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக கடல் வழக்கத்தைவிட சீற்றமாகக் காணப்படுகிறது. முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக கோடியக்கரையில் இருந்து மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.