பான் கார்டு விண்ணப்பிக்கவும் ஆதார் அவசியம்! மத்திய அரசு அறிவிப்பு!
வேன் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வேன் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
ராஜபாளையம் அருகே தெற்கு வெங்கநல்லூா் சாவடி தெருவைச் சோ்ந்த அய்யனாா் மகன் கணேசன் (45). கொத்தனாராக உள்ள இவா், தேசிகாபுரத்தில் வேலையை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். தெற்கு வெங்காநல்லூா் புது பாலம் அருகே சென்றபோது எதிரே மில் தொழிலாளா்களை ஏற்றிவந்த வேன் இவா் மீது மோதியது. இதில், கணேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்ததும் தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து சிதம்பராபுரம் கிராமத்தைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் ராமரிடம் (25) விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த கணேசனுக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா்.