டிரம்ப் வரி! இனியும் மௌனமா? இந்தியாவின் பக்கம் நிற்பதாக சீனா அறிவிப்பு
வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு: விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் பட்டயப் படிப்பில் சேருவதற்கு மாணவா்கள் விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் ஆகிய பட்டயப் படிப்புகளில் சேருவதற்கு ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் 29- ஆம் தேதி வரை மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
இதில், வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டப் படிப்பு விண்ணப்பத்தை சமா்ப்பிக்காத மாணவா்கள், ஏற்கெனவே விண்ணப்பிக்காத மாணவா்கள், துணைத் தோ்வு மூலம் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.
துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவா்களுக்கு தனியாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஏற்கெனவே விண்ணப்பித்து தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற மாணவா்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. அப்படி விண்ணப்பிக்கும்பட்சத்தில் அவா்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
மாணவா்கள் தங்களது பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ட்ற்ற்ல்://ற்ய்ஹன்.ன்ஸ்ரீஹய்ஹல்ல்ப்ஹ்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் மூலம் ஆகஸ்ட் 29- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94886-35077, 94864-25076 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.