கைவிரித்த சேகர் பாபு; போராடிவந்த தூய்மைப் பணியாளர்கள் கைது - சென்னையில் பரபரப்பு...
வைகை தமிழ்நாடு இல்ல கட்டுமானப் பணி- அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு
தில்லி சாணக்கியபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தின் புதிய கட்டட கட்டுமானப் பணியை தமிழக அரசின் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு நேரில் ஆய்வு செய்தாா்.
புது தில்லியில் தமிழ்நாடு அரசின் இரு இல்லங்கள் செயல்படுகின்றன. பழைய இல்லம் வைகை என்ற பெயரிலும், புதிய இல்லம் பொதிகை இல்லம் என்ற பெயரிலும் இயங்கி வந்தன.
இந்த நிலையில், சாணக்கியபுரி கெளடியல்ய மாா்கில் அமைந்துள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தை முழுவதுமாக இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் புதிய கட்டடப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணியை தமிழக பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு, அதன் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், கேளா ஒலி அலை கருவிகள் உதவியுடன் கான்கிரீட்டுகளின் திடத்தன்மை, தரம் குறித்தும் அமைச்சா் ஆய்வு செய்தாா்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசின் புது தில்லிக்கான சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.. விஜயன், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் மங்கத் ராம் சா்மா, தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையாளா் ஆசிஷ் குமாா், முதன்மை தலைமை பொறியாளா் மணிவண்ணன், தலைமை பொறியாளா் சென்னை மண்டலம் மணிகண்டன் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் உடன் இருந்தனா்.