செய்திகள் :

ஷெல் தாக்குதலுக்குள்ளான பகுதிகளைப் போர் பாதித்த மண்டலங்களாக அறிவிக்கவும்: மெஹபூபா

post image

ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை "போர் பாதிக்குள்ளான மண்டலங்கள்" என்று அறிவிக்க வேண்டும் என ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவிய போர்ப் பதற்றம் காரணமாக காஷ்மீரில் பலர் உயிரிழந்தனர். இதனிடையே சர்வதேச எல்லைக்கு அருகிலுள்ள பல பகுதிகளுக்குச் சென்று ஷெல் தாக்குதலுக்குள்ளான பகுதிகளையும், மக்களின் வாழ்கையில் ஏற்பட்ட தாக்கத்தையும் நேரில் கண்டறிந்ததாக அவர் கூறினார்.

போரினால் பாதித்த பகுதிகளைப் போர் பாதிப்பு மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இதனால் மக்களின் மறுவாழ்வுப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றார்.

ஷெல் தாக்குதலால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். போரில் உயிரிழந்த அனைவரும் தியாகிகள் அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் கோருகிறேன். காஷ்மீர் மக்கள் அப்பாவிகள், அவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட வேண்டும். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

பூஞ்ச், உரி, டாங்தார் மற்றும் குப்வாரவின் சில பகுதிகளில் ஷெல் தாக்குதல் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. பலரது குடும்பங்கள் சிதைந்தன, வீடுகள் தரைமட்டாகியது. தங்குவதற்கு இடமில்லாமல் பலர் வீடுகளை இழந்து திறந்தவெளியில் வாழ்கின்றனர். சேதத்தை ஈடுபட்ட வங்கிகள் காப்பீடு வழங்க மறுப்பதாகவும் அவர் கூறினார்.

இதில் மத்திய அரசு தலையிட வேண்டும். வீட்டுக்கடன் வாங்கி வீடு கட்டியவர்களின் வீடுகள் அழிக்கப்பட்ட நிலையில், அவர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

மக்கள் எப்போதும் போரைப் பற்றி சிந்திக்க வேண்டுமா என்று மத்திய அரசு சிந்திக்க வேண்டும். போர் ஒரு தீர்வல்ல, போரை ஆதரிப்பவர்கள் எல்லைப் பகுதிகளில் தங்கள் குடும்பங்களுடன் வந்து வாழ வேண்டும். அப்போது தான் உண்மையில் போர் என்றால் என்ன என்பதை அவர்களுக்கு உணர்த்தும்.

போர் எதற்கும் தீர்வாகாது. நமக்கு இரு தரப்பிலும் உயிரிழப்புகள் உள்ளன. போருக்கு நாம் செலுத்த வேண்டிய வட்டி இதுதான் என்று அவர் கூறினார்.

சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு என்ன சாதிக்கப்பட்டது என்று சொல்ல முடியாது என்றாலும், எல்லையில் வசிக்கும் மக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேறு என்ன சாதிக்கப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் பயங்கரவாதிகள் இன்னும் தலைமறைவாகத்தான் உள்ளனர். அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

வெளியுறவு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானை முன்பே எச்சரித்ததாகக் கூறினார், நீங்கள் அவர்களை எச்சரித்தபோது, ​​பயங்கரவாதிகள் தப்பிக்க வாய்ப்பளித்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இத் திட்டத்தில் ரயில் பாதைக்கான 300 கி.மீ. மேம்பாலப் பணிகள் நிறைவுபெற்ற... மேலும் பார்க்க

விஞ்ஞானி ஜெயந்த் நாா்லிகா் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

பிரபல வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு நாா்லிக்கா் (86) செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது குடும்பத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்தாா். ‘ஹாயில் - நாா்லிகா் பு... மேலும் பார்க்க

ஜொ்மனியின் புதிய பிரதமருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

ஜொ்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மொ்ஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா். ஐரோப்பிய நாடான ஜொ்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நட... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு: எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஏழு நாடாளுமன்றக் குழுக்கள் புதன்கிழமை (ம... மேலும் பார்க்க

உ.பி.: அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க சதி- ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்ப்பு

உத்தர பிரதேச மாநிலம், ஹா்தோய் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பயணிகள் ரயில்களைக் கவிழ்க்க சதிவேலை நடந்துள்ளது. ரயில் ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக காவல் த... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: இடைக்கால உத்தரவுக்கான 3 விவகாரங்கள் குறித்து மட்டும் விசாரணை; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தல்

வக்ஃப் திருத்தச் சட்ட விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டிய மூன்று விவகாரங்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான விசாரணையை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க