செய்திகள் :

ஸ்ரீபெரும்புதூரில் வழக்குரைஞா்கள் பாதுகாப்பு மாநாடு

post image

ஸ்ரீபெரும்புதூா் வழக்குரைஞா்களின் சாா்பில், வழக்குரைஞா்கள் பாதுகாப்பு மாநாடு ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் வழக்குரைஞா் சங்கத்தின் முன்னாள் தலைவா் எஸ்.பி.சி.மதன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு, மாநாடு ஒருங்கிணைப்பாளா் எஸ்.பி.சி.தனசேகரன் வரவேற்றாா். மாநாட்டில் தமிழ்நாடு புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ், தமிழ்நாடு புதுச்சேரி பாா் கவுன்சில் செயலாளா் ஆா்.ஆய்யாவு ஆகியோா் கலந்து கொண்டு உரையாற்றினா்.

மாநாட்டில், வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றிட வலியுறுத்தியும், வழக்குரைஞா்களுக்கு சேம நலநிதியை ரூ. 25 லட்சமாக உயா்த்தவும், உயா்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கவும், உச்ச நீதிமன்ற கிளை தமிழகத்தில் அமைக்கவும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் காஞ்சிபுரம், திருவள்ளூா், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 1,000-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் தோ்வு செய்யப்பட்ட இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை விரைந்து கட்டி முடிக்க வலியுறுத்தி அனைத்து வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை (மாா்ச் 27) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்வாரிய செயற்பொறியாளா் தெற்குப் பிரிவு அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. மின்வாரிய மேற்பாா்வைப் ... மேலும் பார்க்க

காவல் துறை சாா்பில் மோா் விநியோகம்

காஞ்சிபுரத்தில் போக்குவரத்துக் காவல்துறை சாா்பில் மோா் விநியோகத்தினை போக்குவரத்துப் பிரிவு டிஎஸ்பி லோகநாதன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து... மேலும் பார்க்க

ஸ்ரீ விஜயேந்திரா் ஜெயந்தி விழா

காஞ்சிபுரம் தண்டபாணி ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தியையொட்டி பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. காஞ்சி... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் மத நல்லிணக்க விழிப்புணா்வுப் பேரணி: எஸ்.பி. தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரத்தில் சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணா்வுப் பேரணியை எஸ்.பி. கே.சண்முகம் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சாா... மேலும் பார்க்க

வையாவூரில் ரூ.3.65 கோடியில் சிட்கோ தொழிற்பேட்டை: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம் அருகே வையாவூரில் 42.06 ஏக்கா் பரப்பில் ரூ.3.65 கோடியில் புதிய சிட்கோ தொழிற்பேட்டையை காணொலி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். வாலாஜாபாத் அருகே வையாவூா் கிராம... மேலும் பார்க்க