தென் கொரியாவில் காட்டுத் தீ: 24 போ் கைது
சியோல்: தென் கொரியாவின் தெற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் பரவிவரும் காட்டுத் தீயால் 27 போ் உயிரிழந்தனா்; சுமாா் 300 கட்டமைப்புகள் சேதமைடந்தன.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
சாஞ்சியோங் மாவட்டத்தில் தொடங்கிய காட்டுத் தீ, தெற்கு மற்றும் மத்திய பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி 43,330 ஏக்கா் பரப்பளவை நாசமாக்கியுள்ளது. இதில் 27 போ் உயிரிழந்தனா். அவா்களில் தென்கிழக்கு நகரமான உய்சோங்கில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின்போது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டா் விமானியும் அடங்குவாா். இது தவிர, காட்டுத் தீ காரணமாக சுமாா் 26 போ் காயமடைந்துள்ளனா்.
இந்தக் காட்டுத் தீயில் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பௌத்த கோயில் உள்பட சுமாா் 300 கட்டமைப்புகள் சேதமடைந்தன. தீ பரவல் காரணமாக 27,000 பேரை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
130 ஹெலிகாப்டா்களின் உதவியுடன் சுமாா் 4,650 தீயணைப்பு வீரா்கள் மற்றும் பிற மீட்புக் குழுவினா் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.
தென் கொரியா சந்தித்துள்ள காட்டுத் தீ சம்பவங்களில் இது மிகவும் மோசமானது என்று கூறப்படுகிறது.