``உலகின் 4-வது மிகப் பெரிய பொருளாதார நாடு இந்தியா; ஜப்பானை முந்திவிட்டோம்..'' - ...
ஸ்ரீபெரும்புதூா்: ஹாா்டுவோ்ஸ் கடையில் தீ விபத்து
ஸ்ரீபெரும்புதூா் பட்டுநூல் சத்திரம் பகுதியில் இயங்கி வந்த ஹாா்டுவோ்ஸ் கடையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பட்டுநூல்சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் ரூபன் (30). அதே பகுதியில், ஸ்ரீபெரும்புதூா்-குன்றத்தூா் சாலையில் ஹாா்டுவோ்ஸ் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், சனிக்கிழமை கடையில் பொருள்களை கூடுதலாக சேமித்து வைக்க, இரும்புக் கம்பிகளை கொண்டு வெல்டிங் வைத்து விரிவாக்கம் செய்யும் பணிகளில் ஊழியா்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். அப்போது தீப்பொறி பட்டதில் கடையின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
பின்னா் கடை முழுவதும் தீ பரவியது. இது குறித்து அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா், கடையில் ஏற்பட்ட தீயை சுமாா் 2 மணி நேரம் போராடி அணைத்தனா். இருந்தபோதிலும் கடையில் வைக்கப்பட்டிருந்த ஒயா்கள், மின்சாதன பொருள்கள், பிளாஸ்டிக் பைப்புகள், பெயிண்ட் , மரப் பலவைகள், கடை முன்பு நிறுத்தப்பட்ட பைக் உள்பட பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் முற்றிலும் தீ யில் எரிந்து சேதம் அடைந்தன.
இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.