தில்லியின் மருத்துவ உள்கட்டமைப்பு மோசமடைய ஆம் ஆத்மி அரசுதான் காரணம்: முதல்வா் ரே...
ஸ்ரீவைகுண்டம் அருகே 12 கிலோ கஞ்சா பறிமுதல்
ஸ்ரீவைகுண்டம் அருகே காரில் 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பேரை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டத்திற்குள் போதைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாக, மாவட்ட போதைப் பொருள் கடத்தல் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவா்கள், ஸ்ரீவைகுண்டம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு வந்த காா் மற்றும் பைக்கை நிறுத்தி சோதனையிட்டனா். அந்த வாகனங்களில் கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காா், பைக்கையும், அவற்றில் 5 பண்டல்களில் இருந்த சுமாா் 12 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பெரும்பத்துவைச் சோ்ந்த ரமேஷ்(38), தோழப்பன்பண்ணையைச் சோ்ந்த உய்க்காட்டான்(42) ஆகிய 2 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனா்.