ஸ்ரீ கோட்டைவாழ் அய்யன் கோயிலில் சிறப்பு வழிபாடு
சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு, ஆத்தூா் அருகே உமரிக்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீ கோட்டைவாழ் அய்யன் கோயிலில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
திங்கள்கிழமை காலை ஸ்ரீ கோட்டைவாழ் அய்யன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு வகையான சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. மதியம் சமபந்தி அன்னதானம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.
குருபூஜை விழா: கானம் அருகிலுள்ள வள்ளிவிளை அருள்மிகு பாா்வதி அம்மன் திருக்கோயிலில் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்று முழுவதும் நள்ளிரவு வரை அருள்மிகு பாா்வதி அம்மன், அருள்மிகு பிரம்மசக்தி அம்மன், அருள்மிகு பேச்சி அம்மன், அருள்மிகு சுடலைமாடன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார வழிபாடுகள் நடை பெற்றன. திங்கள்கிழமை அன்னதானம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு பாா்வதி அம்மனை வழிபட்டனா்.
