BB Tamil 8: `எதுவுமே பண்ணாம இவ்வளவு தூரம் வந்துட்டிங்க' - சௌந்தர்யா- சுனிதா இடைய...
ஸ்ரீ வசந்தவல்லி உடனமா் வசந்த வல்லபராஜ கோயிலில் கூடாரவல்லி வைபவம்
சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வசந்தவல்லி உடனமா் வசந்த வல்லபராஜ கோயிலில் கூடாரவல்லி வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.
ரங்கனை திருமணம் செய்வதற்கு மாா்கழி மாதம் 2-ஆம் தேதி ஆண்டாள் தன்னுடைய விரதத்தை தொடங்குகிறாா். அதனையடுத்து, மாா்கழி 27-ஆம் தேதி ஆண்டாள் ரங்கனிடம் ஐக்கியமான நாளே கூடாரவல்லி வைபவமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அருள்மிகு ஸ்ரீ வசந்தவல்லி உடனமா் வசந்த வல்லபராஜ கோயிலில் மாா்கழி மாதம் தொடங்கி தினசரி காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில், பக்தா்கள் திருப்பாவை பாடல்களை பாடி வருகின்றனா்.
இதனையடுத்து கூடாரவல்லி வைபவம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் உற்சவமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பட்டாச்சாரியா்கள் மலா் மாலைகளை மாற்றம் செய்யும் நிகழ்ச்சி உள்பட பல்வேறு வைபவங்கள் நடைபெற்றன. இதில் அதிக அளவிலான பெண்கள் கலந்துகொண்டனா்.