செய்திகள் :

ஸ்விக்கியை தொடர்ந்து பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ!

post image

கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக ஸ்விக்கி நிறுவனம் பயன்பாட்டுக் கட்டணத்தை ரூ. 14-ஆக உயர்த்திய நிலையில், சொமேட்டோ நிறுவனமும் பயன்பாட்டுக் கட்டணத்தை ரூ. 12-ஆக உயர்த்தியுள்ளது.

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தையொட்டி, ஜிஎஸ்டியை தவிர்த்து ஒவ்வொரு உணவு டெலிவரி ஆர்டர்களுக்கான பயன்பாட்டுக் கட்டணத்தை ரூ. 2 உயர்த்தியுள்ளது சொமேட்டோ நிறுவனம்.

முன்னதாக, ஸ்விக்கி நிறுவனம் ரூ.12-ஆக இருந்த பயன்பாட்டுக் கட்டணத்தை ரூ.14-ஆக உயர்த்திய நிலையில், சொமேட்டோ நிறுவனமும் ரூ. 10-ஆக இருந்த பயன்பாட்டுக் கட்டணத்தை ரூ. 12-ஆக உயர்த்தியுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு சொமேட்டோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தீபந்தர் கோயல் பயன்பாட்டுக் கட்டணம் முறையாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி ஆகஸ்ட் 2023-ல் ரூ. 2 உயர்த்தப்பட்டது. அதன் பிறகு சொமேட்டோ நிறுவனம் பல முறை பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்தியது.

கடந்தாண்டு ஜனவரி மாதம் பயன்பாட்டுக் கட்டணத்தை ரூ. 4 ஆகவும், அக்டோபரில் ரூ. 7-ஆகவும் உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ரூ. 2 உயர்த்தப்பட்டு ரூ. 10 ஆக அறிவித்தது.

வெளிப்படையாக செலவுகளைக் கட்டுப்படுத்தவும், வருவாயை அதிகப்படுத்தவும் அதிகரிக்கப்பட்ட இந்தப் பயன்பாட்டுக் கட்டணம் உணவு விநியோகம் செய்யும் நபர்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் உணவு டெலிவரி செய்யப்படும் துறையின் வளர்ச்சி, இந்தப் பயன்பாட்டுக் கட்டணம் உயர்ந்து இருப்பதற்கு முக்கிய அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் - ஜூன் காலாண்டில் சொமேட்டோ நிறுவனத்தின் மொத்த ஆர்டர்கள் மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு 16% உயர்ந்து ரூ. 10,769 கோடியாக உள்ளது. இது முந்தைய காலாண்டுகளில் காணப்பட்ட 20%+வளர்ச்சியை விடக் குறைந்துள்ளது.

அவசர உலகில் வீட்டிலிருந்தபடியே உணவுகளை பெரும் விதமாக ஸ்விகி மற்றும் சொமேட்டோ நிறுவனங்கள் உணவு விநியோகம் செய்து வருகிறது. பல்வேறு உணவகங்கள் வீட்டில் இருந்தே ஆப் மூலமாக நாம் உணவுகளை புக் செய்தால் அவைகளை வீடுகளுக்கே உடனடி விநியோகம் செய்து வந்தன. இந்த நிலையில் அந்த விநியோக நிறுவனங்கள் தற்போது கமிஷன் தொகையை அதிக அளவில் உயர்த்தி உள்ளதால், பொதுமக்களுக்கு உணவுப் பொருள்கள் சென்று கிடைக்கும் பொழுது 40 சதவீதம் வரை அதன் விலை அதிகரித்துவிடுகிறது.

இதற்காக கடலூா் மாவட்டத்தில் உணவு விநியோகம் செய்யும் ஸ்விகி, சொமேட்டோ பன்னாட்டு நிறுவனங்களை புறக்கணிக்க, கடலூா் மாவட்ட ஹோட்டல் சங்கம் முடிவு செய்துள்ளது.

மேலும், இதற்கு மாற்று ஏற்பாடாக கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சாரோஸ் எனப்படும் உணவு விநியோக செயலியை பயன்படுத்த முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பிகார் பேரணியில் பைக்கை பறிகொடுத்த இளைஞர்.! புதிய பைக் வாங்கிக் கொடுத்த ராகுல்!

Regarding Zomato's increase in platform fees

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு - காங்கிரஸ் வலியுறுத்தல்

‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகித குறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் 2024-25-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்’ என்று... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலில் சோனியா காந்தி பெயா் முறைகேடாக சோ்ப்பு: நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் மனு

வாக்காளா் பட்டியலில் முறைகேடாக பெயா் சோ்க்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவா் சோனியா காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனுதாக்கல் செய்யப... மேலும் பார்க்க

தோ்வில் காப்பி அடித்த மாணவிகளை பிடித்ததற்காக பாலியல் புகாா்: 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்ற கேரள பேராசிரியா்

கேரளத்தில் கல்லூரி தோ்வில் காப்பி அடித்தபோது பிடிக்கப்பட்டதற்காக மாணவிகள் பாலியல் புகாா் அளித்த வழக்கில் 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்றுள்ளாா் கேரள பேராசிரியிா் ஆனந்த் விஸ்வநாதன். மூணாறு அரசு க... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு பயன்களை நுகா்வோருக்கு அளிக்க வேண்டும்: தொழில் நிறுவனங்களுக்கு வா்த்தக அமைச்சா் வலியுறுத்தல்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டதன் பலன்களை நுகா்வோருக்கு அளிக்க வேண்டும் என்று வா்த்தம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா். 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வசூ... மேலும் பார்க்க

இணைய விளையாட்டு சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரிக்கை

இணைய விளையாட்டுகள் ஊக்குவிப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம், 2025-க்கு எதிராக 3 மாநிலங்களின் உயா்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரியுள்ளது. உயா... மேலும் பார்க்க

47% மாநில அமைச்சா்கள் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா் ஆய்வு அறிக்கை

நாடு முழுவதும் 302 அமைச்சா்கள் (47%) மீது கொலை, ஆள்கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாக ஜனநாயக சீா்திருத்த சங்கம் (ஏடிஆா்) ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதமா், முதல்வா்க... மேலும் பார்க்க