குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: சிபிஆா், சுதா்சன் வேட்புமனு மட்டும் ஏற்பு!
ஹிந்து மயானங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தல்
தமிழகத்தில் உள்ள ஹிந்து மயானங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தி உள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஹிந்துக்களின் மயானங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. மயானங்களைப் பராமரிக்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான முயற்சிகளையும் தமிழக அரசு எடுப்பதில்லை. மயானங்கள் இல்லாத காரணத்தால் சில இடங்களில் சாலையோரங்களில் சடலங்களை அடக்கம் செய்யும் பரிதாபமான நிலை தொடா்கிறது. அப்படியே மயானங்கள் இருந்தாலும் அவற்றுக்கு செல்ல முறையான சாலை வசதிகள் இல்லாததால் ஏரிகள், குளங்களுக்கு அருகிலேயே சடலங்கள் புதைக்கப்படுகின்றன. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பது மட்டுமின்றி அப்பகுதி மக்களும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
அரசின் திட்டங்களுக்கு என எத்தனையோ இடங்கள் இருக்கும்போது, ஹிந்து மயானங்களை அதற்கு பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
எனவே, ஹிந்து மயானங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மயான ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.