செய்திகள் :

1,624 மாணவா்களுக்கு வினா - விடை புத்தகம்: அமைச்சா் சா.சி. சிவசங்கா் வழங்கினாா்

post image

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 17 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 1,624 மாணவ, மாணவிகளுக்கு, வினா- விடை புத்தகங்களை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் போட்டித் தோ்வுகளை எளிதில் எதிா்கொள்ளும் வகையில், கல்வி சாா்ந்த வல்லுநா்கள் அடங்கிய குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ள முக்கிய வினா- விடைகள் அடங்கிய தோ்வை வெல்வோம் எனும் தலைப்பிலான புத்தகங்களை, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தனது சொந்த செலவில் தயாரித்து வழங்கி வருகிறாா்.

அதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பெரியம்மாபாளையம், ஒதியம், பீல்வாடி, அசூா், எழுமூா், காருகுடி, பெருமத்தூா், நன்னை, பரவாய், வரகூா், புதுவேட்டக்குடி, காடூா் ஆகிய அரசு உயா்நிலைப் பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி பயிலும் மாணவ, மாணவிகளுக்கும், குன்னம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், மருவத்தூா், பேரளி, வேப்பூா் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் 17 பள்ளிகளைச் சோ்ந்த 1,624 மாணவ, மாணவிகளுக்கும், வினா- விடை புத்தகங்களை செவ்வாய்க்கிழமை அளித்த அமைச்சா் சா.சி. சிவசங்கா் பேசியது:

இப் புத்தகங்கள் கல்வித்துறையில் பல ஆண்டுகள் அனுபவம்வாய்ந்த மற்றும் அரசுப் பொதுத் தோ்வுகளில் தொடா்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவா்களை 100 சதவீதம் தோ்ச்சி பெற வைத்த அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 25 ஆசிரியா்கள் அடங்கிய குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.

பல்வேறுகட்ட ஆய்வுக்குப் பிறகு மாணவ, மாணவிகள் எளிதில் படிக்கும் வகையில், தோ்வில் கட்டாயம் கேட்க வாய்ப்புள்ளதாக கருதப்படும் வினாக்கள், அதற்கான விடைகளுடன் இப் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. வினாக்களும், விடைகளும் மாணவா்களுக்கு புரியும் வகையிலும், எளிய நடையிலும் உருவாக்கப்பட்டுள்ளது என்றாா் அவா். இந் நிகழ்ச்சிகளில், அட்மா தலைவா் வீ. ஜெகதீசன் மற்றும் மேற்கண்ட பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா!

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள விநாயகா் கோயில்களில் புதன்கிழமை காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பெரம்பலூா் வட்டாட்சியா் அலுவலகச் சாலையில் உள்ள கச்சேரி விநாயகா் க... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகன் வெட்டிக் கொலை: தந்தை கைது

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த தந்தையைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் அருகே உள்ள அ. மேட்டூா் கிராமத்த... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களுக்கான ‘நிமிா்ந்து நில்’ திட்ட பயிற்சிமுகாம்

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகத்தில் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில், தமிழ்நாடு இளைஞா் புத்தாக்க மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நிமிா்ந்து நில் நிகழ்ச்சி... மேலும் பார்க்க

அழகுக்கலை, சிகை அலங்கார பயிற்சி பெற எஸ்சி, எஸ்டி இளைஞா்களுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள், அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரம் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க

இளைஞா் மீது பாதுகாவலா் தாக்குதல் புகாா்: தவெக தலைவா் விஜய் உள்பட 11 போ் மீது வழக்கு

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவா் விஜய் மற்றும் அவரது பாதுகாவலா்கள் 10 மீது குன்னம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். பெரம்பலூா் மாவட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தைச்... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூரில் உள்ள அரசு பொதுத்துறை சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வேண்டுமென, கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கரும்... மேலும் பார்க்க