சிவகங்கை மாவட்டம்: பிளஸ் 1 தோ்வில் 94.79 % மாணவ, மாணவிகள் தோ்ச்சி!
10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு: 17-ஆவது இடத்தைப் பிடித்த திருப்பூர்!
திருப்பூர்: 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 94.84 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 17-ஆவது இடத்தைத் திருப்பூர் மாவட்டம் பிடித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 348 பள்ளிகளில் 14,588 மாணவர்கள், 14,871 மாணவிகள் என மொத்தம் 29,459 பேர் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியிருந்தனர். இந்த நிலையில், 13,622 மாணவர்கள், 14,317 மாணவிகள் என மொத்தம் 27.939 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதன் தேர்ச்சி விகிதம் 94.84 சதவீதமாகும். கடந்த 2023 ஆண்டு 10 ஆம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் 11-ஆவது இடத்தையும், 2024 ஆம் ஆண்டில் மாநில அளவில் 21-ஆவது இடத்தைப் பிடித்திருந்த நிலையில் தற்போது மாநில அளவில் 17 ஆவது இடத்தைப் பிடித்தது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 348 பள்ளிகளில் 162 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இதில், 39 அரசுப் பள்ளிகளும் அடங்கும். அதே போல, அரசுப்பள்ளிகளில் 15,301 மாணவ, மாணவியர் தேர்வு எழுதியிருந்த நிலையில் 14,006 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.54 சதவீதமாகும்.