`அதிஷி தனது தந்தையையே மாற்றிவிட்டார்' - பாஜக வேட்பாளர் மீண்டும் சர்ச்சை... அழுத ...
10,701 பேருக்கு வேலை... டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு!
2024ம் ஆண்டில் 10,701 தேர்வர்கள் தெரிவு மற்றும் 14,353 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியிடப்பட்டதாக டிஎன்பிஎஸ்சி(TNPSC) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு வெவ்வேறு நிலைகளில் நிலுவையிலிருந்த 30 தேர்வுகளின் தெரிவுப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, 2024-ம் ஆண்டு 10,701 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தெரிவு (selection) செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: 2024 - அதிகரித்த ரயில் விபத்துகள்!
2024-ம் ஆண்டு, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க, 14,353 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (கூடுதல் செயல்பாடுகள்) சட்டத்தின் கீழ் 42 பொதுத்துறை நிறுவனங்கள், சட்டபூர்வ வாரியங்கள், மற்றும் சட்டபூர்வ ஆணையங்களில் (authorities) உள்ள 1406 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்த 661 பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைவு (shortfall) காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
2024ம் ஆண்டு தேர்வர்களின் நலன் கருதியும், தெரிவுப்பணிகளை விரைவுபடுத்தவும், தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.