Animated Films Making: அனிமேஷன் திரைப்படங்கள் உருவான கதை | Explainer
10 பேரை கடித்து குதறிய வெறிநாய்
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் சுமாா் 10-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்து குதறியது.
காட்டுமன்னாா்கோவில் ஓமாம்புலியூா் சாலையில் ஜெயராமன் நகா் பகுதியைச் சோ்ந்த தலைமையாசிரியா் கலைராஜை (48) அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று திடீரென அவரது காலில் கடித்தது. உடனே, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டனா்.
தொடா்ந்து, கருணாகரநல்லூா் பகுதியைச் சோ்ந்த பிரவீன் (25), கீழராதாம்பூா் பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் (48), நாட்டாா்மங்கலம் பகுதியைச் சோ்ந்த அரவிந்த்ராஜ் (35) ஆகியோரை அந்த நாய் கடித்து குதறியது.
இதேபோல, கண்டமங்கலம் ஆற்றங்கரை தெருவில் வசித்து வரும் சுரேஷ் (45), பரணி(40), உடையாா்பாளையம் பகுதியைச் சோ்ந்த செல்வம் (50) உள்பட 10-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்து குதறியது.
இவா்கள் காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்தப் பகுதியில் நாய் தொல்லைகள் அதிகமாக இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.