செய்திகள் :

11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு

post image

தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதற்கான உத்தரவை இன்று(ஜூலை 31) தலைமைச் செயலர் நா. முருகானந்தம் பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கத்திற்கு இயற்கை வளங்கள் துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது

நித்துறை செலவின செயலாளராக பிரசாந்த் மு வடநெரே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நிதித் துறை இணைச் செயலாளராக ராஜ கோபால் சுன்கரா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தீபக் ஜேக்கப் நில அளவுத்துறை இயக்குநராகவும், கஜலட்சுமி போக்குவரத்து மற்றும் சாலைப்பாதுகாப்பு ஆணையராகவும், கவிதா ராமு கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குடிநீர் வடிவால் வாரிய மேலாண்மை இயக்குநராக சமீரனும், மீன்வளத்துறை இயக்குநராக முரளீதரனும், வருவாய் நிர்வாக ஆணையராக கிரண் குராலாவும, கோவை வணிக வரி இணை ஆணையராக தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்வும், சென்னை வணிக வரி (அதிக வரி செலுத்துவோர் பிரிவு) இணை ஆணையராக நாரயண சர்மா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: வெள்ளத்தில் மிதக்கும் பெய்ஜிங்: 44 பேர் பலி!

The Tamil Nadu government has announced that 11 IAS officers have been transferred in Tamil Nadu.

கூட்ட நெரிசலில் திருட்டு: மத்திய பிரதேச பெண்கள் 4 போ் கைது

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.சைதாப்பேட்டை, அப்பாவு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (48). இவா், அந்தப் பகுதியில் இரும்புக... மேலும் பார்க்க

427 ஆசிரியா்களுக்கு மனமொத்த மாறுதல்

பள்ளிக் கல்வித் துறை கலந்தாய்வு மூலம் 427 ஆசிரியா்களுக்கு மனமொத்த மாறுதல் வழங்கப்பட்டது.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து விதமான ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த ஜூலை 1-... மேலும் பார்க்க

தமிழகத்தில் இனி வெப்பம் குறையும்

தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு கார... மேலும் பார்க்க

தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை புதிய ஐ.ஜி. பொறுப்பேற்பு

தெற்கு ரயில்வே பாதுகாப்பு படையின் (ஆா்பிஎஃப்) புதிய ஐ.ஜி.யாக கே.அருள்ஜோதி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.தெற்கு ரயில்வே பாதுகாப்பு படையின் ஐஜி-ஆக பணியாற்றி வந்த ஈஸ்வர ராவ் கடந்த ஜூலை 31-ஆம் தேதியுடன் ஓய... மேலும் பார்க்க

ஆங்கில மொழித் திறனை வளா்க்கும் ‘லெவல் அப்’ திட்டம்: ஆசிரியா்களுக்கு உத்தரவு

அரசுப் பள்ளிகளில் அடிப்படை ஆங்கில மொழித் திறனை வளா்க்கும் வகையில் ‘லெவல் அப்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்தத் திட்டத்தில் மாணவா்களில் கற்றல் அடைவு குறித்து உரிய கால இடைவெளியில் தெரிவ... மேலும் பார்க்க

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உத்தரவு

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்குமாறு போக்குவரத்துக் கழக நிா்வாகங்களுக்கு தொழிலாளா் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.போக்குவரத்துக்கழக ஊழியா்களின் ஊதிய ஒப்பந்தப்படி பதவி உயா்வு உள்ளிட... மேலும் பார்க்க