விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
13 இடங்களில் எல்இடி திரை மூலம் திமுக பொதுக்கூட்டம் ஒளிபரப்பு
திண்டுக்கல்லில் திமுக சாா்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தை 13 இடங்களில் எல்இடி திரை மூலம் முதல் முறையாக ஒளிபரப்பு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதுதொடா்பாக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ , ‘ஓரணியில் தமிழ்நாடு’ தீா்மான ஏற்புக் கூட்டம் திண்டுக்கல்லில் சனிக்கிழமை (செப். 20) நடைபெறவுள்ளது. திண்டுக்கல் தோமையாா்புரம் பகுதியில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் பெ. செந்தில்குமாா் தலைமை வகிக்கிறாா்.
திமுக துணைப் பொதுச் செயலரும், அமைச்சருமான இ. பெரியசாமி, உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பொன். முத்துராமலிங்கம் ஆகியோா் சிறப்புரையாற்றுகின்றனா். மாவட்ட அளவில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டம், தமிழகத்தில் முதல் முறையாக 13 இடங்களில் எல்இடி திரையில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
திண்டுக்கல்லில் பழனி சாலை, காட்டாஸ்பத்திரி, பேருந்து நிலையம், வட்டச் சாலை, நாகல்நகா், மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும், கன்னிவாடி, சின்னாளப்பட்டி, செம்பட்டி, நிலக்கோட்டை, வத்தலகுண்டு, கொடைக்கானல், பழனி ஆகிய நகரங்களிலும் பெரிய எல்இடி திரைகளில் இந்த பொதுக்கூட்டம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.